
இப்னு இஸ்ஹாக் கூறுகிறார்: அப்ரஹா அல்அஷ்ரம் — யமனின் ஆட்சியாளர் அவர் கஅபாவிற்கு எதிராக யானைகளுடன் புறப்பட்டார்.அவர் மக்கள் கஅபாவை விட்டு தன் கட்டிய ஆலயத்தை நோக்கி வர வேண்டும் என்று விரும்பினார். அவர் யானைப் படையுடன் மக்காவை நோக்கி வந்தார். அல்லாஹ் கூறுகிறான்: {ألم تَر كَيْف فَعلَ رب ُّكَ بأصْحاب الفِيل ألم يجْعلْ كَيْدَهُم فِي تَضْلِيل وأرْسلَ عليْهم طيْرا أبابيلَ تَرْمِيهم بحِجارةٍ مِن سِجّيل فَجعلهم كَعصْفٍ مأكول} (ஸூரா அல்ஃபீல்) அப்துல் முப்தலிப் மற்றும் அப்ரஹா சந்திப்பு இப்னு இஸ்ஹாக் கூறுகிறார்:அப்ரஹா அல்அஷ்ரம் மக்காவை நோக்கி வந்தபோது,அவரின் படை மக்காவின் ஒட்டகங்களைப் பிடித்தது. அப்துல் முப்தலிப் மகன் ஹாஷிம் அவர்களின் இருநூறு ஒட்டகங்களும் அதில் இருந்தன.அப்துல் முப்தலிப் அப்ரஹாவைச் சந்திக்கச் சென்றார்.அவர் உயரமானவரும், அழகான தோற்றமுடையவரும் இருந்தார்.அப்ரஹா அவரைக் கண்டபோது மரியாதையுடன் நடத்தினார்.அவர் அவரைத் தன் இருக்கையில் உட்கார வைத்தார். அப்துல் முப்தலிப் கூறினார்:“எனது ஒட்டகங்களை எனக்கு திருப்பிக் கொடு.” அப்ரஹா கூறினார்: “நான் உன் இல்லத்தை இடிக்க வந்திருக்கிறேன்; நீ அதைப் பற்றி பேசாமல், உன் ஒட்டகங்களைப் பற்றி பேசுகிறாய்.” அப்துல் முப்தலிப் கூறினார்: “ஒட்டகங்களுக்கு நான் உரிமையாளர்; இந்த இல்லத்திற்கு ஒரு இறைவன் இருக்கிறான்;அவன் அதை பாதுகாப்பான்.” அப்ரஹா கூறினார்:“அவன் என்னைத் தடுக்க முடியாது.” அப்துல் முப்தலிப் கூறினார்:“நீ முயற்சி செய்து பார்.” அப்ரஹா ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்தான். யானைப் படையெடுப்பு முடிவு அப்ரஹா மக்காவை நோக்கிப் புறப்பட்டான்.அவர்களின் யானைகள் நகர மறுத்தன.அவர்கள் அவற்றைத் தள்ளினார்கள்;அவை மர்ந்துகொண்டன.அவர்கள் அவற்றை ஷாம் நோக்கி திருப்பினார்கள்;அவை விரைவாக நடந்தன.மக்கா நோக்கி திருப்பினார்கள்;அவை நகரவில்லை.அல்லாஹ் அவர்கள்மேல் பறவைகளை அனுப்பினான். {وأرْسلَ عليْهم طيْرا أبابيلَ:: تَرْمِيهم بحِجارةٍ مِن سِجّيل:: مأكول فَجعلهم كَعصْفٍ} அவை கற்களை வீசியது.அவர்கள் அழிந்துபோன புல்லைப் போல ஆனார்கள். அப்ரஹா காயமடைந்தான்.அவன் யமனுக்கு திரும்பிக் கொண்டான்.அவன் அங்கே இறந்தான். ஆமுல் ஃபீல் அந்த ஆண்டு “யானையின் ஆண்டு” என்று அழைக்கப்பட்டது.அதே ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பிறந்தார்கள். திருப்பிறப்பிற்கு முன் அறிகுறிகள் உலகங்களுக்கெல்லாம் இரக்கமாக அனுப்பப்படவிருந்த முஹம்மது ﷺ அவர்களின் வருகை முன்கூட்டியே அறிகுறிகளால் சூழப்பட்டதாக றிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அம்மையார் ஆமினா (ரழி) அவரை கருவுற்றிருந்த காலத்தில் ஒரு விசித்திர அனுபவத்தை அறிவிக்கின்றார். அவர் கூறினார்: “என்னிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது; அந்த ஒளியின் வெளிச்சத்தில் ஷாம் நாட்டின் அரண்மனைகள் எனக்குத் தென்பட்டன.”(இப்னு ஸஅத், தலாயில்). அதே இரவில் பாரசீக மன்னன் கிஸ்ராவின் அரண்மனையில்அதிர்வு ஏற்பட்டதாகவும், அதன் பதினான்கு மாடங்கள் இடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.(தபரி) நூற்றாண்டுகளாக எரிந்து கொண்டிருந்தபாரசீகர்களின் வழிபாட்டு நெருப்பு அந்த இரவில் அணைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.(தபரி, தலாயில்)
